Home Page

About Page

Photo Page

What's New Page

Contact Page

Favorite Links

Slide Show

சங்கமம் வானொலி ரீபீசியின் முக்கியஸ்தருக்கு விற்பனை.

 

 


சங்கமம் வானொலியானது ரீபீசி ராமராசனின் முக்கியமான நண்பர் ஒருவருக்கு 12ஆயிரம் பவுண்டுகளுக்கு 40விகிதம் விற்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் சங்கமத்தின் போக்கினை இந்த முக்கியஸ்தரே முடிவெடுக்கவுள்ளார். திறந்த கதவு மூடப்பட்டதற்கும் இந்த வானொலியின் பங்குதாரராகியவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
மீராண்ணோய் ! இதை ஒருக்கால் உறுதிப்படுத்த முடியுமானால் உறுதிப்படுத்துங்கோ.  எதிர்வரும் நாட்களில் இந்த வானொலி தொடர்பாகவும் விற்கப்பட்டது , பணக்கைமாறல் தொடர்பாகவும் பல அதியசயிக்கும் தகவல்கள் வெளிவரவிருக்கின்றன.  சங்கமத்தின் ஆதரவாளர்கள் ,அபிமானிகள் இந்த விடயத்தில் கவனமாக இருங்கள். உங்கள் வானொலி அபிமானத்தை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். இது ஒரு அவசரமானதும் , கவனமாக இருக்க வேண்டியதுமான நேரம். திரும்பத்திரும்ப நெயர்கள் ஏமாறக்கூடாது.

Turkey Picture

1)திறந்த கதவுகள் தொடர்பான திடுக்கிடும் உண்மைகள் !

ஊடகம் என்ற பெயருக்குள் செய்யப்படுகின்ற துரோகத்தனங்களினை அம்மபலமாக்குகவே இக்கடிதத்தை வரைகிறேன். இக்கடிதம் தொடர்பாக ஆதாரமான தகவல்களைப் பெறவிரும்பும் நண்பர்கள் மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

முதலில் திறந்த கதவுகள் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதற்கான காரணங்களை அறியத்தர விரும்புகிறேன். சட்டச்சிக்கல் என்ற பெயரில் திறந்த கதவுகள் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதற்கான அடிப்படை சட்டமல்ல. இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே நிறுத்தவேண்டும் என்று வானொலிக்குள் ஈ...எழுத்தில் உள்ள அறிவிப்பாளரும் (இவர் பற்றிய பின்னணி , முன்னணி தகவல்கள் பின்னர் தருகிறேன்) , டக்ளஸிடம் ஜே.பீ.பட்டம் வாங்கி ஊடகவியலாளர் என்ற முகமூடியுடன் லண்டன் வந்திருந்த பெண்ணின்(இவரது வருகையானது ஒரு ஊடுருவல் சக்தியின் தேவைக்காக லண்டன் வந்தவர்) து}ண்டுதலுடன் மும்முரமாக ஈடுபட்டதும் சுவிசில் இதற்கான அழுத்தங்கள் கொடு;க்கப்பட்டதும் நிகழ்ந்தது தான் உண்மை நிலவரம். இதற்கான பின்னணியில் இருந்தவர்கள், இருப்பவர்கள் விபரங்கள் இங்கு தேவையில்லை என்பதனால் தவிர்த்துக் கொள்கிறேன்.

திறந்த கதவுகள் நிகழ்ச்சி தொடர்பாக சங்கமம் வானொலிக்கு வந்த கடிதமானது , பொதுவாக எல்லா ஊடகங்களுக்கும் வருகின்ற சாதாரண விசாரணையே திறந்தகதவுகளுக்கும் லண்டன் றேடியோ ஓதொறிற்றியால் வந்தது.

அதாவது திறந்தகதவுகள் நிகழ்ச்சியில் புலிகளுக்கு ஆதரவாகப் பாடல் போட்டு நிகழ்ச்சி நடாத்தியாதாக ஒரு தமி;ழ்த்தேசியத்தை கொள்ளையிடும் ஒரு தேசத்துரோகியினால் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் றேடியோ ஓதோறிற்றி குறிப்பிட்ட சில வாரங்களின் நிகழ்ச்சியைத் தமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சியை நிறுத்துமாறோ அல்லது திறந்த கதவுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றோ றேடியோ ஓதோறிற்றி கடிதம் போடவில்லை.


இந்நிகழ்ச்சிபற்றி 3கடிதம் மட்டுமே வானொலிக்குப் போயிருந்தது. அதுவும் றேடியோ ஒதோறிற்றி முதல் போட்ட கடிதத்துக்கு வானொலி நிர்வாகம் பதில் கொடுக்காமையினால்தான் அடுத்த இரு கடிதங்களும் போட்டார்கள்.

இந்த நாடுகளில் இருப்பவர்களுக்கு இந்தக் கடிதங்கள் பற்றி அதாவது ஒரு கடிதத்துக்கோ இல்லது ஏதாவது ஒன்றிற்கான பணம் செலுத்தாது விடும் பட்சத்தில் அடுத்த நடவடிக்கையாக இறுதி மன்னிப்புக் கடிதம் வழங்குவார்கள். அப்படியே இந்தக் கடிதங்கள் போனது.

ஆனால் 9கடிதம் போனதாதவும் அது திறந்த கதவு சம்பந்தமாகவும் என்பதும் , திறந்த கதவுகள் நிகழ்ச்சியை நடாத்தினால் வானொலிக்கு பிரச்சனையென்றும் கூறப்பட்டது முழுப்புூசனிக்காயைச் சோற்றினுள் புதைக்கும் முயற்சியும், முழுமையான பொய்ப்பிரச்சாரமும் ஆகும்.

திறந்த கதவுகள் பற்றிய கடிதங்கள் தவிர வானொலி பற்றிய வேறுபல புகார்கள் றேடியோ ஓதோறிற்றிக்குக் போயுள்ளது. அக்கடிதங்களையெல்லாம் திறந்தகதவுகளுக்கானது என்று பொய்யான செய்தி வானலையில் வழங்கப்படுகிறது.

திறந்த கதவுகள் நிகழ்ச்சியில் எந்தவிதமான பிரச்சனையுமில்லை என உறுதிசெய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பிரிவினரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தின் நகல் என்னிடம் இருக்கிறது. தேவை ஏற்படுகின்ற பட்சத்தில் அனைவரும் பார்க்கும் வண்ணம் இங்கு தருவதற்குக் காத்திருக்கின்றேன். திறந்தகதவுகள் பற்றி புகார் செய்தவரின் பெயர் விபரங்கள் உட்பட சகல ஆதாரங்களும் இருக்கின்றது. சமயம் வருகின்ற போது சகலமும் இங்கு தரப்படும்.

திறந்த கதவுகள் நிகழ்ச்சி மட்டுமே சங்கமம் என்ற வானொலியை நானறிந்தவரையில் ஐரோப்பிய , கனடாவரை அறிமுகப்படுத்தியது என்பதை சங்கமத்தின் பணிப்பாளர் திருலோகச்சுந்தரோ அவரை வழிநடாத்தும் வள்ளல்களோ அறிவார்கள். ஆனால் இவர்கள் வியாபாரிகள் , தேசியத்தை விற்று வியாபாரம் செய்பவர்கள் , மற்றும் போட்டி , பொறாமை , இந்த நிகழ்ச்சியினை தொகுத்தழிக்கும் சேது என்ற இளைஞனின் வளர்ச்சியில் பொறாமை கொண்டதனாலும் தான் திறந்த கதவுகள் திருலோகச்சுந்தரால் நிறுத்தப்பட்டது.

இப்படிப்பலரது வளர்ச்சியில் தனது ஆழுமையைக் காட்டி அழித்தொழித்த திருலோகச்சுந்தர் வழமையான தனது திருவிளையாடலையும் , தேசியம் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டும் , வானொலி என்ற பெயரில் தேசியத்துரோகத்திற்குத் துணைபோகும் சுயநல வியாபாரத்திற்கும் பலியானோர் பலர். இந்த வகையில் பலியாகியிருக்கும் நபர்தான் திறந்த கதவுகள் தொகுப்பாளரும்.

சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் சேது அவர்கள் செய்த தவறு தேசியத்துக்காகத் தன் குரலைக்கொடுத்ததும் , துரோகிகளின் துரோகத்தனங்களை வெளியில் கொண்டு வந்ததும்தான். இதைவிட அந்த ஊடகவியலாளன் எந்தத் தவறையும் செய்யவில்லை என்பதே உண்மை. சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டுச் சிலகருத்துக்களை எதிரிகளுக்கு ஆத்திரமூட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. அதுகூட அந்த இளைய ஊடகவியலாளனின் தேசியப்பற்றினால் எழுந்த நியாயமான கோபங்கள் என்பதை மறுக்க முடியாது.

அடுத்த கடிதத்தில் சங்கமத்தின் செய்தியாளர்கள் அவமதிப்புப் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் , வன்னித் தொடர்பென்ற சுத்துமாத்துப் பற்றிய உண்மைகள் , வன்னியில் திருலோகச்சுந்தர் செய்த திருகுதாளங்கள் , தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு திருலோகச்சுந்தர் செய்த துரோகம் , மோசடிகள் போன்ற உண்மைகளுடன் அடுத்த கடிதம் தொடரும்.

(கடிதம் தொடரும்......)
இப்படிக்;கு
- ஓவியன் -


Link to Other Pictures

My Favorite Things To Do

குறிப்பிட்ட சில செய்தியாளர்கள் சங்கமத்துடன் இணைந்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கான கடந்த 6 மாதக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை.

மற்றும் இக்கட்டான காலப்பகுதியில் கொலைவலயங்களுக்குள் நின்று செய்தி கொடுத்த செய்தியாளர்களின் உழைப்புக்கான ஊதியம் கொடுக்கப்படவி;ல்லை.

ஆனால் அந்த நேரங்களில் உயிரைக்கொடுத்து உழைத்த செய்தியாளர்கள் வானொலி நிர்வாகம் என்ற பெயரில் அவமதிக்கப்பட்டும் , மதிக்கப்படாமலும் அவர்களாகவே ஒதுங்கிப்போகச் செய்துள்ளார்கள்.

ஆனால் உயிரைப் பணயம் வைத்து உளைத்த செய்தியாளர்கள் பணத்துக்காக உரிய நேரங்களில் தங்கள் ஊடகதர்மத்தை நிலைநாட்டியவர்கள் அல்ல.

உயிர் போகும் தறுவாயில் கூட உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே செயற்பட்டவர்கள்.

உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிக்குப்பட்டிருந்த செய்தியாளர்களான 3 செய்தியாளர்கள் ஐரோப்பிய நாடொன்றில் சில காலம் வந்து தங்கிவிட்டுச் செல்வதற்காக சங்கமம் வானொலியிடம் ஸ்பொன்சர் கேட்டார்கள்.

ஆனால் வானொலி பணிப்பாளர் அவர்களுக்குக் கொடுத்த பதில் 'சாகிறவர்கள் எல்லோருக்கும் பணம் சேர்க்கவும் , இவர்களுக்கெல்லாம் கடிதம் கொடுக்கவும் எனக்கென்ன இலாபம்" என்று கேட்கப்பட்டது.

இப்படி அவமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தங்கள் குடும்பங்களை விட்டுத் தனியாக அந்தர வாழ்வு வாழ்கிறார்கள்.

அண்மையில் ஒரு செய்தியாளர் கதைத்த போது சொன்னார் இந்த வானொலிக்காக நாம் உளைத்ததற்குத் தமக்குக் கிடைத்த ஊதியம் ஊர் விட்டு , உறவுகளை விட்டு அச்சமான வாழ்வுதானென்றார்.

இந்தச் செய்தியாளர்களுடன் கருணா விவகாரம் முடிந்துடன் தொடர்புகளை மெல்ல மெல்ல விடப்பட்டது.

பின்னர் அவர்களது செய்தியில் , ஆய்வில் ஆழுமை போதாது விடயம் இல்லை என்றெல்லாம் ஒதுக்கப்பட்டு அவர்களை வானொலி மறந்து போனது.

தற்போது வானொலியில் தரமான செய்தியாளகள் இல்லையென்றதும் மறந்து போனவர்களையெல்லாம் அன்புடன் விசாரித்து செய்தி தருமாறும் கேட்கப்பட்டுள்ளது.

என்னதான் இருந்தாலும் தனிமனித கௌவரம் ஒன்று இருக்கிறதல்லவா. சுூடு , சொரணை என்றெல்லாம் இருக்கிறதல்லவா ? அது தன்மானம் இழக்க மனத்தைரியத்தைக் கொடுக்குமா ? இல்லைத்தானே.

அந்த அடிப்படையில் உயிர் கொடுத்து உளைத்தவர்கள் இனி உதவமாட்டோம் என்று ஒதுங்கி நிற்கிறார்கள்.

வானொலி என்பது வியாபாரப்போட்டிக்கால்தான் நிமிர வேண்டும். ஆனால் வியாபாரத்துக்காக தேசியத்தை நேசிக்கும் ஊடகவியலாளர்களுக்கு உயிர் போகும் நேரத்தில்கூட உதவாத வானொலியும் , பணிப்பாளர்களும் ஈரமே இல்லாத இதயங்கள் போலிருக்கிறது.

அமரர் நாட்டுப்பற்றாளர் நடேசனுக்குக்கூட இதே நிலமைதான் நடந்தது.

நடேசனுக்காக நீலிக்கண்ணீர் வடித்த ஊடகங்களோ , கண்ணீர் அஞ்சலி படித்து , வீரவசனம் பேசியவர்களோ நடேசன் என்ற மனிதனுக்கு சமயத்தில் எந்த உதவியையும் செய்யவில்லை.

நடேசனுக்காக உதவிகோரப்பட்ட போது சாகிறவர்களுக்கெல்லாம் சங்கமம் காசு சேர்க்கவா இருக்கிறது என்றுகூடச் உதாசீனம் செய்யப்பட்டது.

ஆனால் நடேசன் இறந்ததும் வன்னியில் நின்று ஊடகப்பிரிவின் கணணியைப் பயன்படுத்தி ஊடகப்பிரிவின் மின்னஞ்சலால் அறிக்கை மட்டும் விடப்பட்டது.
அன்று முழுவதும் சோககீதமும் , நினைவுகூரலும் நிகழ்ந்தது.

வன்னி ஊடகப்பிரிவினரின் கணணியைத் தவாறக தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்தியது எத்தகையை குற்றம் என்பதைப்புரியாத சுந்தரின் சிறுபிள்ளைத்தனமான சிந்தனையை என்ன சொல்வது ? இது கொடுத்த உரிமையைத் தவறாகப்பயன்படுத்தியதே ஆகும்.

ஒருவரின் வளர்ச்சிக்காக ஒருதுளி உதவினாலும் அந்த உதவியை மறக்காது இருப்பதுதான் மனிதப்பண்பு.
தேவைகள் முடிந்ததும் து}க்கியெறிவதும் , பாராமுகமாய் இருப்பதும் சுயநலவாதிகளின் குணமாகும்.

புலிகளின் கிளிநொச்சிப்பணிமனையில் அனைத்துலகப் பிரிவில் பணியாற்றுகின்ற நந்தகோபன் என்ற போராளியுடன் தமக்குத் தொடர்பு என்றும் , வன்னித்தலைமையின் முடிவுடனே சங்கமம் செயற்படுவதாகவும் நேயர்களுக்குத் தவறான ஒரு தகவலும் பரிமாறப்படுகிறது.
(சங்கமம் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் தொடரும்......)

அனைத்தும் அனுமதியுடன் பிரசுரமாகிறது தகவல் உறுதிபடுத்தப்பட்டவை.

(சங்கமம் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் தொடரும்......)

Some of My Favorite People
My grandma and grandpa are some of my favorite people. Grandma always has a cupboard full of twinkies and raisen-filled cookies. She also lets me pick my favorite cereal when we go to the grocery store. Grandpa takes us for rides on his four-wheeler when we go to his house in the summer.

Crayon Drawing
This is one of my first drawings of my brother Joe. Joe has read hair. Grandma gave him that shirt for Christmas, and she gave me one like it, only blue.
Link to More Drawings